Friday 22 November 2013

வாழ்த்தும்...... ஆசியும் .........








சென்ற வருடத்தில் ஒரு நாள் ," இந்தப் புத்தகத்தைப் பார் ராஜி." என்று என் கணவர் சொல்ல , நான் சுரத்தே இல்லாமல் ,அவர் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தேன். 

தோழி, சினேகிதி, அவள் , இதில் எதுவென்று நினைவில் இல்லை.ஒரு பக்கத்தைத் திருப்பிச் சின்னக் கட்டத்தில் இருக்கும் செய்தியைப் படிக்கச் சொல்ல நானும் படித்தேன்.

"அதுக்கென்ன இப்போ ?" என்றது நான்.

"என்னவா? நீ தானே 'என்னவோ எழுதிக் கிழிப்பேன் ' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே. அதற்காகத் தான் கொடுத்தேன். அலட்சியமாகப் பேசுகிறாயே! வேண்டாமென்றால் போ " என்று அவர் திரும்ப ,

"ஆமாம் ....... "சட்டென்று உரைத்தது எனக்கு.

இரண்டொரு தடவை, பத்திரிக்கைகளுக்கு எழுதியனுப்பினேன்.
இன்று வரை என்னவாயிற்று, என்றே தெரியவில்லை. அந்த அலுப்பில் எழுதியனுப்புவதை விட்டு விட்டேன். ஆனால் எழுதவேண்டும் என்று கீறல் விழுந்த ரெக்கார்டாய் பேசுவதை மட்டும் நிறுத்தவில்லை.

அதற்குத் தான் என்னவர் அந்தச் செய்தியைக் காட்டினார்.
செய்தி ,செய்தி என்று சொல்லிப் படுத்துகிறாயே. அதிலென்ன தான் இருந்தது என்று கேட்கிறீர்களா?

பிரபல பதிவர்கள் ,திருமதி ரஞ்சனி நாராயணன் , திருமதி காமாட்சி அவர்களின் வலைப்பூ பற்றி ஒரு சிறிய குறிப்பு.

இவர்கள் இன்டர்நெட்டில் எழுதுகிறார்கள் என்பது மட்டுமே எனக்குப் புரிந்தது.
நாமும்.................... எழுதலாமா ? வேண்டாமா? பட்டிமன்றம் ஓடியது மனதில்.

முதலில் ,அவர்களின் வலை URL வைத்து ,அவர்கள் வலைப்பூவைத் திறந்து பார்ப்போமே ,என்று பார்த்தால் அற்புத மாளிகைக்குள் நுழைவது போன்ற பிரமிப்பு உண்டாயிற்று. இவர்களெல்லாம் எப்படி எழுதுகிறார்கள், எவ்வளவு எழுதுகிறார்கள் ,மலைத்துப் போனேன்.

நமக்குத் தமிழ் எழுதவும், படிக்கவும் தெரியும் என்பதாலேயே ..... நாமும் எழுதுவதா?......
ஒரு சின்னச் சந்தேகம்.

ஆனால், ஆர்வம் , சந்தேகத்தை ஒரு தள்ளு தள்ளி விட்டு எழுது என்று ஆணையிட  என் கிறுக்கல்களை  ஆரம்பிக்கத் தீர்மானித்தேன்.

சரி எப்படி ஆரம்பிப்பது ? எங்கு ஆரம்பிப்பது, எதைப் பற்றி எழுதுவது.? மீண்டும் ஒரு பிரேக் .
கணினி பொறியியல் வல்லுனராய் இருக்கும் என் தங்கை பையன் ,சதீஷ் வந்திருக்கும் போது,
என் ஆசையைச் சொன்னேன்.

"இவ்வளவு தானே பெரியம்மா "என்று சொல்லி விட்டு சட்டென்று,
Word Press இல் ,ப்ளாக் ஒன்று ஆரம்பித்துக் கொடுத்தான்.
நீங்கள், எதை வேண்டுமானாலும் ,எழுதிக்கொள்ளுங்கள் என்று சொன்னதும் எனக்கு ஆர்வம் தாங்கவில்லை.

நீ ஆரம்பித்துக் கொடுத்து விட்டாய். நான் எழுதினால் யார் படிப்பார்கள் ?என்று மறு கேள்வி கேட்க

அது நீங்கள் எழுதுவதில் அடங்கியிருக்கிறது என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.

அன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு WordPress ஐயே, சுற்றி, சுற்றி வந்தேன்.
ஒன்றும் சரியாகப் புலப்படவில்லை. எதைப் பற்றியோ எழுதினேன். ஆனால் சேமிக்கவில்லை போலிருக்கிறது. கரெண்ட் போய் விட்டது.

கரண்ட் வந்தபின்  திறந்தால் ஒன்றுமேயில்லை. கண்ணில் நீர் வராத குறை தான்.

மீண்டும், திருமதி ரஞ்சனி நாராயணன் வலைப் பக்கம் , விஸிட். வேறு யாரைப் பற்றியோ வலையுலகம் பற்றியோ எதுவும் தெரியாதாதால் ரஞ்சனியின் வலை என்னிடம் பட்ட பாடு இருக்கிறதே.................நான் பார்த்ததிலேயே அன்று நூறு ஹிட்ஸ்  வந்திருக்கும் அவர்களுக்கு.

ஆனாலும் 'வேர்ட் பிரஸ்' ஒரு மர்ம மாளிகை போலவே இருந்தது.
எங்கெல்லாம் ,திருமதி ரஞ்சனியின் வலையில் ,லிங்க் இருந்ததோ அங்கெல்லாம் போய் க்ளிக்கினேன்.

comments என்ற வார்த்தையைக் கிளிக்கினால் சுருட்டி வைத்திருந்த கேலண்டர் பிரிந்தது போல் சர்ரென்று மிக நீளமாய் கீழே  இறங்கியது. அதில் நிறையப் பேர் பதிவைப் பற்றிக் கருத்திட்டிருந்ததைப் பார்த்தேன் .

அங்கே எங்காவது லிங்க் வருகிறதா என்று பார்த்தால் என்னிடம் மாட்டியது திரு வை. கோபாலகிருஷ்ணனின் வலை. அவருடைய வலைப் பக்கம் போனால் டிசைன், எழுத்துரு , எல்லாமே வித்தியாசமாக, இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. URL பார்த்து Blogspot என்பதைத் தெரிந்து கொண்டேன்.

உடனே இன்னுமொரு ஜன்னலைத் திறந்தேன். ஹால் ஜன்னலா என்று கேட்காதீர்கள். பிரவுசர் விண்டோ தான். கூகிலிற்குப் போய்ப் பிளாக் ஸ்பாட்  என்று டைப்பினேன். உடனே பிளாக் ஸ்பாட் கதவு arattai காகத் திறந்தது.பிளாக் ஸ்பாட்  புரிபடுவது  கொஞ்சம் எளிமையாகப் பட்டது எனக்கு.

உடனே என் குடித்தனத்தை வேர்ட்பிரஸ் இலிருந்து ,பிளாக் ஸ்பாட்டிற்கு
மூட்டை கட்டிக் கொண்டு வந்து விட்டேன்.
அப்புறமென்ன ....எழுத ஆரம்பித்தேன்.
நான் எழுத ஆரம்பித்த சமயத்தில், தீபாவளி ஜவுளி எடுக்கச் சென்று வந்த சமயம். என் பேரன் ,அபினவ் 'ஆச்சா, ஆச்சா 'என்று எங்களைப் பாடாய் படுத்தியதை 'தீபாவளி ஆச்சா ' என்று பதிவிட்டேன்.

அதற்குப் பிறகு தான் காமெடி. பதிவிட்டதை publish என்று அழுத்தாமல் விட்டிருக்கிறேன். அப்பபோ போய் யாராவது பார்த்தார்களா என்று பார்த்தால்
(அதெல்லாம் புரிந்தது stats போய் க்ளிக்க வேண்டுமென்று.) ஒரு ஈ ,காக்காய் வரவேண்டுமே. "பப்ளிஷே "ஆகவில்லை . அப்புறம் யார் வந்து படிப்பார்கள்? ஒரு மாதிரி நானே கண்டு பிடித்துப் பப்ளிஷ் செய்தேன்.

அதற்குப் பிறகும் இரண்டு நாள் ,நான்  மட்டுமே  படித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரேயொரு முறை என் கணவர் படித்தார்.ஊரிலிருந்த வந்திருந்த, என் நாத்தனாரை விட்டுப் படிக்கச் சொன்னேன். ஆக மொத்தம் மூன்று பேர் தான் படித்திருந்தோம்.
என் நிலைப் பார்த்து ,பரிதாப்பட்டு ,என் கணவரே  கமெண்ட்ஸ் எழுதினார். ஒரு கருத்து வந்து விட்டது ,என்று மகிழலாமென்றால் அந்த நினைப்பிலும் மண்.
கமெண்டைப் பார்த்தால் rajalakshmi commented என்றேயிருக்க ,நொந்து போனேன

என் கணவரோ  ஹா...ஹா... என்று ,வெடிச் சிரிப்பு, சிரிக்க ,நான் அசடு வழிய ... என்ன தவறு செய்தேன் என்று புரிந்தது.

திரு வைகோ சார் வலைக்குச் சென்று அவரை என் தளத்திற்கு  வரவேற்றேன். தவறாமல் உடனடி வருகைப் புரிந்தார்.அது மட்டுமில்லாமல்
எனக்கு ஆலோசனைகளை ,அழகாய், அள்ளி வழங்கியிருக்கிறார்.அதையெல்லாம் ஓரளவிற்கு   கடைபிடித்து வருகிறேன் என்றே  சொல்ல வேண்டும்.
அதைப் படிக்க இங்கே' க்ளிக் 'செய்யவும்.
என்னுடைய maiden venture பதிவிற்கு மூன்று பேர் வருகை புரிந்தார்கள்.

வலையுலகம் என்கிற அற்புத உலகம், மெல்ல மெல்ல , புரிய ஆரம்பித்தது. என் வலையில் நிறைய நண்பர்களும் தோழிகளும் மாட்டிக் கொண்டார்கள். இவர்கள் எல்லாம் நான் தேங்காமல்  இருக்க உதவுவார்கள் என்று புரிந்தது.

இதற்காக நான் arattai க்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன
 "ஊக்குவிப்பார் இருந்தால் ஊக்கு விற்பவன் கூடத் தேக்கு விற்பான்" என்று கவிஞர்  வாலி  சொன்னது நினைவிற்கு வருகிறது. 

இந்த ஒரு வருடத்தில் எனக்குப் பின்னூட்டம் என்கிற டானிக் கொடுத்தவர்கள் லிஸ்ட் மிக மிகப் பெரியது. அவர்கள் யார்யார் என்று சொல்லாமல் போனால் நான் நன்றி மறந்தவளாவேன்.
திருமதிகள் ரஞ்சனினாராயணன், சித்ராசுந்தர் ,கோமதி அரசு ,ராஜராஜேஸ்வரி,மகி,மஹாலக்ஷ்மி ,மனோசாமிநாதன் , தமிழ்முகில்,சாதிகா,
உஷாஅன்பரசு, ராஜி,மலர்பாலன்,மஞ்சுபாஷினிசம்பத்குமார் , ஜலீலா, கவிநயா,சமீரா,காமாக்ஷி, சந்திரகௌரி ,துளசிகோபால்,தமிழ்செல்வி, கீதாசாம்பசிவம் ,லக்ஷ்மி,விஜிபார்த்திபன்,கிரேஸ் ,அருணா செல்வம், அமைதிச் சாரல்,அனுஸ்ரீனி,ரத்னாபீட்டர்ஸ்

மற்றும்

திருவாளர்கள் .வை .கோபாலகிருஷ்ணன்,திண்டுக்கல் தனபாலன்,ரமணி, ஸ்ரீராம்,சுப்புத்தாத்தா,தமிழ்இளங்கோ,ஸ்கூல்பையன்,ஜோக்காளி,வெங்கட்ஜி,GMB,Chellappa Yagyaswamy,MTG,பாலகனேஷ்,கவியாழி கண்ணதாசன்,வருண் ,நம்பள்கி,சுரேஷ்,துரை செல்வராஜ் ,Arumugam Eswar,செம்மலை ஆகாஷ்,ஜெயதேவ் ,கடைசிபெஞ்ச் ,ரூபன் ,பாலசுப்ரமணியன், கவிஞர் பாரதிதாசன்.அட்வகேட் ஜெயராஜன் ,சென்னைப் பித்தன்,விமலன், விஜயன்,அப்பாதுரை,முனைவர். குணசீலன்,
 ஆகியோர் என் பதிவுகளைப் பொறுமையாய் படித்து என்னை ஊக்குவித்தவர்கள்.

அவர்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றி .இவர்கள் எல்லாம் என் நினைவிற்கு வந்தவர்கள். வேறு யார் பெயரும் விட்டிருந்தால் அவர்களுக்கும் என் நன்றி.

அலை போல், திரண்டு வந்து  என்பதிவுகளைப் படித்து எக்கச்சக்கமாய்  ' ஹிட்ஸ் ' கொடுக்கும் வாசக அன்பர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி.

பதிவுகள் எழுத ஆரம்பித்த பொழுது தான் உணர்ந்தேன் ,வலையுலகம் என்பது ,கட்டுபாடுகளற்ற சுதந்திரமான வெட்டவெளி. அதில் எழுத்துப் பயணம், என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் தவறினாலும், கத்தி நம்மைப் பதம் பார்த்து விடும்.நான்  சர்வ ஜாக்கிரதையாக நடப்பதற்கு உதவுவது என்னவர் , என் பதிவுகளின் எடிட்டர். அவர் எடிட் செய்யவில்லை,என்றால் பல சமயங்களில், நான் வம்பில் மாட்டியிருப்பேன். அதனால் அவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி .

Arattai யின் ஓராண்டு நிறைவிற்கு உங்கள் வாழ்த்தையும் ஆசியையும் வழங்குங்களேன். ................ப்ளீஸ் .

image courtesy----google


83 comments:

  1. வணக்கம்

    பதிவு அருமையாக எழுதியுள்ளிர்கள் அத்தோடு தங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வலைப்பதிவர்கள் பற்றியும் குறிப்பிட்ட விதம் நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பெயரை விட்டிருந்தேன். மன்னிக்கவும். இப்பொழுது சேர்த்து விட்டேன்.
      முதலாக வந்து பாராட்டியதற்கு நன்றி ரூபன்.

      Delete
    2. உங்களுடைய வலையுலக அனுபவத்தை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.. !!!

      +++++++++++

      வணக்கம்...

      நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

      அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

      சரியா...?

      உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

      அப்போ தொடர்ந்து படிங்க...

      ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

      Delete
  2. Arattai யின் ஓராண்டு நிறைவிற்கு இனிய் வாழ்த்துகள்...!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி .

      Delete
  3. ராஜலக்ஷ்மி அவர்களே: எனக்கு சும்மா வந்து ஒரு பதிவரின் பதிவைப் புகழ்ந்து, பாராட்டி பின்னூட்டமிடவெல்லாம் தெரியாது. என்னுடைய ஊக்குவிப்பு என்பது ஏதாவது பதிவு சம்மந்தப்பட்ட பின்னூட்டமிடுவது (பல முறை எதிர் கருத்தாகவும் அமையும்). நீங்க நிகழ்வுகளை (விசில் பற்றி எழுதுனீங்க இல்ல?) ரொம்ப நல்லா ரசிக்கதக்கப் பகிர்கிறீர்கள் என்பது என் தாழ்மையான எண்ணம். உங்கள் வரவில் சந்தோஷம், இந்த busy world ல உங்கள் பதிவை வாசிக்க நேரம் கிடைத்து வாசிக்கும்போது ரசிக்கிறேன்.

    தொடர்ந்து எழுதுங்க ! இதுதான் உங்களுக்கு என் வாழ்த்து, ஆசி எல்லாம். :)

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிடைக்கும் போது அவசியம் வாசியுங்கள். என் பதிவை ரசித்துப் படித்தமைக்கு நன்றி. உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  4. சகோதரி தங்கள் ஓராண்டு நிறைவிற்கு இனிய வாழ்த்து.
    இன்னும் பல ஆண்டுகள் நிறைவு பெற வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. சகோதரி தங்கள் ஓராண்டு நிறைவிற்கு இனிய வாழ்த்து.
    இன்னும் பல ஆண்டுகள்நிறைவு பெற வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோவைக்கவி உங்கள் வாழ்த்துக்களுக்கு.

      Delete
  6. வலைபதிவுக்கு வந்த வரலாறை சொன்ன விதம் அதி சுவாரஸ்யம்.வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய உங்களுக்கே உரித்தான நடையில் எழுதி அசத்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸாதிகா உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும்.

      Delete
  7. 1]

    வலைப்பதிவுக்கு வந்து ஓராண்டு முடிக்கும் தங்களுக்கு என் மனம் நிறைந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    நானும் 01.01.2014 அன்று மூன்றாண்டு முடிக்க உள்ளேன். அதை ஓர் மாறுபட்ட முறையில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி வைகோ சார். உங்கள் மூன்றாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை காண ஆவலாய் உள்ளேன்.

      Delete
    2. //rajalakshmi paramasivam 23 November 2013 17:45
      வாழ்த்துக்களுக்கு நன்றி வைகோ சார். உங்கள் மூன்றாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை காண ஆவலாய் உள்ளேன்.//

      அதைப்பற்றி விபரமாக ஓர் பதிவு 31.12.2013 நள்ளிரவு மிகச்சரியாக 12 மணிக்கு வெளியிடலாம் என நினைத்துள்ளேன்.

      எதற்குமே ப்ராப்தம் + கொடுப்பிணை இருக்க வேண்டும். கடவுள் அருளால் நான் நினைத்தபடி அது நல்லபடியாக நிறைவேற வேண்டும். பதிவர்கள் பலரின் ஒத்துழைப்பும் அதற்குத்தேவையாக இருக்கும். பார்ப்போம். ;)

      Delete
  8. 2]

    வாழ்த்தும் ...... ஆசியும் ....... என்ற தலைப்பில் இந்தப்பதிவினை மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

    இதுபோன்ற அனுபவங்கள் எல்லோருக்குமே ஆரம்பத்தில் ஏற்படக்கூடிய இயல்பான விஷயங்கள் தான். ஆவல் அதிகம் இருக்கும். எதிர்பார்ப்புகள் ஏராளமாக இருக்கும். ஓரளவு நாம் பிறரால் அடையாளம் காணப்பட்டு, பின்னூட்டக்கருத்துகள் வர ஆரம்பித்த பிறகு, அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம். இன்று வரை அதிலிருந்து மீளமுடியாமல் உள்ளோம் என்பதே உண்மை.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது மிகச் சரியே . வலயுலகத்திற்கு நான் அடிமைப் பட்டு விட்டேன் என்றே சொல்ல வேண்டும். எங்கு சென்றாலும்(பெண் ,பிள்ளை வீடுகளுக்கு) என் மடிக் கணினியுடன் தான் செல்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

      Delete
  9. 3]

    தாங்கள் வெளியிட்டுள்ள முதல் பதிவுக்கு முதல் பின்னூட்டம் கொடுத்துள்ளவனும் நானாகவே அமைந்துள்ளது ஓர் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. முதல் பின்னூட்டம் மட்டுமில்லை முதல் followerம் நீங்கள் தான் வைகோ சார். அதற்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் .

      Delete
    2. //rajalakshmi paramasivam 23 November 2013 17:51
      முதல் பின்னூட்டம் மட்டுமில்லை முதல் followerம் நீங்கள் தான் வைகோ சார். அதற்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் .//

      ஆமாம் மேடம். அதை இங்கு சொல்ல மறந்து விட்டேன். அதைப்பற்றியும் தங்களின் முதல் பதிவினில், என் பின்னூட்டத்தில் சொல்லியுள்ளேன். ;)

      Delete
  10. 4]

    தாங்கள் இதுவரை இன்றுவரை வெளியிட்டுள்ளது 70 பதிவுகள். அனைத்து 70 பதிவுகளிலுமே தங்களுக்குப் பின்னூட்டம் இட்டுள்ள ஒரே ஆள் நான் மட்டுமே.

    இன்னொருவர் 99% என்னுடன் கூடவே வந்துள்ளார்கள். ஒரு 2-3 பதிவுகளில் மட்டும் அவர்களைக்காணோம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லும் நபர் திருமதி இராஜராஜேஸ்வரி அல்லது திரு. திண்டுக்கல் தனபாலன்.இவர்கள் இருவரில் ஒருவர் என்று நினைக்கிறேன். சரியா?

      Delete
    2. //rajalakshmi paramasivam 23 November 2013 17:53
      நீங்கள் சொல்லும் நபர் திருமதி இராஜராஜேஸ்வரி அல்லது திரு. திண்டுக்கல் தனபாலன்.இவர்கள் இருவரில் ஒருவர் என்று நினைக்கிறேன். சரியா?//

      இருவரில் ஒருவர் என்பது மிகச்சரியே. ;)))))

      தாங்களே கண்டுபிடித்துக்கொள்ளுங்கள். எனக்கும் என் கணக்குப்பிள்ளைக் கிளிக்கும் இதுபோல ஏராளமான வேலைகள் இன்று உள்ளன. பலவித புள்ளிவிபரங்கள் சேகரிக்க உள்ளது. இன்று நாள் முழுவதும் மின்தடை வேறு. இப்போது தான் ஒருவழியாக மின்சாரமே கிடைத்துள்ளது.

      Delete
  11. 5]

    என்னுடைய பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கையே தங்களின் பதிவுகளில் சுமார் 200க்கு மேல் உள்ளன. ஒரே பதிவினில் பல பின்னூட்டங்கள் கொடுத்துள்ளேன்.

    உதாரணமாக “குடைக்குள்” போன்ற பல பதிவுகளைச்சொல்லலாம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோபு சார் ,என் பதிவுகளுக்கு மீள் வருகைகள் புரிவதற்கு.

      Delete
  12. 6]

    தங்களுக்கு இயற்கையாகவே நகைச்சுவை உணர்வும், எழுத்துத்திறமையும் சேர்ந்து உள்ளன. அதனால் தங்களுக்கு எழுத்துலகில் நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று நான் பல தடவை சொல்லியுள்ளேன்.

    இப்போதும் அதையே தான் இங்கு சொல்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வைகோ சார் உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசீர்வாதத்திற்கும்.

      Delete
  13. 7]

    தங்களை ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராக ஆக்க வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். தாங்கள் இன்னும் அதற்கான சம்மதம் எனக்குத் தரவில்லை.

    தங்கள் செளகர்யப்படி எப்போது வேண்டுமானாலும் சொல்லுங்கோ. பரிந்துரைக்கிறேன்.

    அன்பின் திரு. சீனா ஐயா அவர்களும் வாய்ப்புத்தர காத்திருக்கிறார். அதற்கு இப்போதே என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நான் இப்பொழுது தான் ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறேன். அதோடு நான் இன்னும் 100வது பதிவே இன்னும் எழுதவில்லை. நூறு பதிவுகள் முடியட்டுமே சார் . வலைசர ஆசிரியர் என்பது மிகவும் பொறுப்பு மிகுந்தது.
      நூறு பதிவுகள் முடிந்த பிறகு பார்க்கலாமே அதை !
      ஆனால், உங்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கு நன்றி வைகோ சார்.

      Delete
    2. //rajalakshmi paramasivam 23 November 2013 18:08
      நான் இப்பொழுது தான் ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறேன். அதோடு நான் இன்னும் 100வது பதிவே இன்னும் எழுதவில்லை. நூறு பதிவுகள் முடியட்டுமே சார் . வலைசர ஆசிரியர் என்பது மிகவும் பொறுப்பு மிகுந்தது. நூறு பதிவுகள் முடிந்த பிறகு பார்க்கலாமே அதை !
      ஆனால், உங்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கு நன்றி வைகோ சார்.//

      அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. 50 பதிவுகள் முடித்திருந்தாலே போதும் என்பதே எழுதப்படாத விதியாக உள்ளது. ஐம்பது பதிவுகள் கூட முடிக்காத ஒரே ஒருவருக்கு மட்டும் என் பரிந்துரையின் பேரில் வாய்ப்பு அளித்து உதவினார்கள்.

      எனினும் தாங்கள் சொல்வதுபோல 100 பதிவுகள் முதலில் முடியட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

      அன்புடன் VGK

      Delete
  14. 8]

    இந்தப்பதிவினில் என்னைப்பற்றி மறக்காமல் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

    மிக்க நன்றி + சந்தோஷம்.

    பதிவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார் உங்கள் மீள் வருகைகளுக்கு .

      Delete
  15. 9] Revised Comment

    விரைவில் 100 பதிவுகளை எட்ட முயற்சி செய்யுங்கள்.

    அவசரமில்லாமல் பொறுமையாக பதிவு செய்து மெதுமாக 100ஐ எட்டுங்கள் போதும்.

    பதிவுகளின் எண்ணிக்கைகளை விட எழுத்தின் தரம் தான் மிகவும் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம்.

    தாங்கள் இப்போது எழுதி வருவதே ஓரளவு நல்ல தரமான எழுத்துக்களாகத்தான் உள்ளன.

    அதை அப்படியே SLOW AND STEADY ஆக MAINTAIN செய்யுங்கோ போதும்.

    பதிவுகளின் எண்ணிக்கைக்காக எதையாவது எழுதி அது மொக்கைப்பதிவு என்று பெயர் எடுக்க வேண்டாம். அதுபோல எழுதி பெயர் எடுக்க ஏராளமானவர்கள் உள்ளனர். அந்த வெட்டி வேலைகள் நமக்கு வேண்டவே வேண்டாம்.

    நகைச்சுவை உணர்வே உங்களிடம் உள்ள ப்ளஸ் பாயிண்ட். அதையும் விட்டுடாதீங்கோ. வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    -oOo-

    ReplyDelete
    Replies
    1. என் பதிவின் நகைச்சுவையை ரசித்துப் படித்து வருகிறீர்கள் என்பது நன்றாகவே புரிகிறது வைகோ சார்.
      உங்களைப் போன்றவர்களின் வாழ்த்துக்களுடனும், ஆசிகளுடனும் நூறாவது பதிவை எட்டிப் பிடித்து விடுவேன் என்பதில் சந்தேகமேயில்லை.
      நன்றி வைகோ சார் உங்கள் ஆசிகளுக்கு.

      Delete
    2. நன்றி! நன்றி!! நன்றி !!!

      ALL THE BEST Madam.

      Delete
  16. 'அரட்டை'யின் ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துகள். இனி வரப்போகும் ஆண்டுகளிலும் இதேபோல் நகைச்சுவையுடன் அரட்டையைத் தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்.

    "ஆனால், ஆர்வம் , சந்தேகத்தை ஒரு தள்ளு தள்ளி விட்டு எழுது என்று ஆணையிட"__________ எழுதிய விதம் நல்லாருக்குங்க. மொத்தத்தில் பதிவு முழுவதுமே சூப்பரா இருக்கு.

    கடைசியில் எடிட்டருக்கும் நன்றி சொல்லி அப்பதவிக்குரிய‌வரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திட்டீங்க ! வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. என் பதிவின் நகைச்சுவையை ரசித்துப் படித்து கருத்திடுவதற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சித்ரா.
      எடிட்டருடன் வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது இல்லையா. ...அதற்குத் தான் இந்த ஐஸ்.................

      Delete
  17. நீங்க கொடுத்து வைச்ச ஆளுங்க... எனது மனைவியின் பூரிக்கட்டை பூஜையும் அவள் செய்யும் அர்ச்சனைகளையும் தினமும் கேட்டுக் கொண்டு பதிவுகள் இடுகிறேன் ஆனால் உங்களுக்கோ மிக நல்ல உதவியாளர் கிடைத்து இருக்கிறார் அதனால் தான் அரட்டை மிகவும் சுவையாக இருக்கிறது.

    மேலும் நன்றாக அரட்டை அடிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கள் எல்லாம் இருக்கும் போது நான் கண்டிப்பாக arattai அடிப்பதில் எந்தக் குறையும் வராது. என்னை வாழ்த்துவதற்கு நன்றி MTG.

      Delete
  18. உங்கள் வலையுலக அனுபவங்கள் சுவார்ஸமாயிருந்தது.
    முயற்சி கைகூடடியுள்ளது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி டாக்டர் சார். உங்கள் எழுத்துக்களின் ரசிகர்கள் நானும் என் கனவரும். உங்கள் ஹாய் நலமா வலையைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். சார்.
      நன்றி உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  19. நான் ஆறு மாதமாகத்தான் எழுதுகிறேன். நீங்கள் பன்னிரண்டு மாதமாக! ஆகவே எனக்கு சீனியர் நீங்கள். எனவே அவர்களைப் போல "வாழ்த்த வயதில்லை" என்று தப்பித்துவிடலாமா? ....அருமையாக எழுதுகிறீர்கள். நிறைய எழுதுங்கள். முன்னுக்கு வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி செல்லப்பா சார் உங்கள் வாழ்த்துக்களுக்கு .

      Delete
  20. பதிவுகள் எழுத ஆரம்பித்த பொழுது தான் உணர்ந்தேன் ,வலையுலகம் என்பது ,கட்டுபாடுகளற்ற சுதந்திரமான வெட்டவெளி. அதில் எழுத்துப் பயணம், என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் தவறினாலும், கத்தி நம்மைப் பதம் பார்த்து விடும்.நான் சர்வ ஜாக்கிரதையாக நடப்பதற்கு உதவுவது என்னவர் , என் பதிவுகளின் எடிட்டர். அவர் எடிட் செய்யவில்லை,என்றால் பல சமயங்களில், நான் வம்பில் மாட்டியிருப்பேன். அதனால் அவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி .

    அருமையாகச் சொன்னீர்கள்
    ஓராண்டு நிறைவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    ஒரு நல்ல முதிர்சியான எழுத்துக்கள் பதிவுலகில் கிடைக்க
    காரணமாயிருந்த தங்கள் கணவருக்கு கூடுதல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என்னை வாழ்த்துவதற்கும், என் எடிட்டரையும் சேர்த்து வாழ்த்துவதற்கும், அவர் சார்பாகவும் உங்களுக்கு நன்றி.

      Delete
  21. அரட்டை - ஓராண்டு நிறைவு.... இன்னும் பல ஆண்டுகள் அரட்டை தொடர எனது வாழ்த்துகள்......

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்ஜி உங்கள் வாழ்த்துக்களுக்கு.

      Delete
  22. வலையுலகம் என்கிற அற்புத உலகம், மெல்ல மெல்ல , புரிய ஆரம்பித்தது. என் வலையில் நிறைய நண்பர்களும் தோழிகளும் மாட்டிக் கொண்டார்கள்///எல்லோருமே ஆனந்தமாய் இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியே

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா உங்கள் வாழ்த்துக்கு

      Delete
  23. பதிவுகள் எழுத ஆரம்பித்து ஒரு வருடம்தான் ஆகிறதா? உங்கள் எழுத்துகளைப் படித்தால் நீண்ட காலமாய் எழுதிக் கொண்டிருப்பவர் போலத் தெரிகிறது. மென்மேலும் சிறக்க, மென்மேலும் உயர 'எங்கள்' வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தைப் பற்றி நீங்கள் சொல்வது கொஞ்சம் கூடுதல் என்றே நினைக்கிறேன். ஆனாலும் நீங்கள் என் எழுத்தைப் பற்றி சொல்வதை மெய்படுத்தி விடுவதற்கு முயற்சிக்கிறேன். நன்றி ஸ்ரீராம் சார் 'எங்கள்' வாழ்த்துக்களுக்கு

      Delete
  24. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி தனபாலன் சார்.

      Delete
  25. சகோதரிக்கு நன்றி!

    // உடனே என் குடித்தனத்தை வேர்ட்பிரஸ் இலிருந்து ,பிளாக் ஸ்பாட்டிற்கு மூட்டை கட்டிக் கொண்டு வந்து விட்டேன்.அப்புறமென்ன ....எழுத ஆரம்பித்தேன்.//

    நீங்கள் வலைப்பதிவு எழுதும் விஷயத்தில் வேர்ட்பிரஸ்ஸிலிருந்து ப்ளாக்ஸ்பாட்டிற்கு மாறியது நல்லதுதான். ஏனெனில் வேர்ட்பிரஸ்ஸில் இருக்கும் பதிவுகளுக்கு கருத்துரை பெட்டியில் எழுதுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இதனாலேயே வேர்ட்பிரஸ்ஸில் இருக்கும் பதிவர்களுக்கு அதிகம் கருத்துரைகள் வருவதில்லை.


    // திரு வைகோ சார் வலைக்குச் சென்று அவரை என் தளத்திற்கு வரவேற்றேன். தவறாமல் உடனடி வருகைப் புரிந்தார்.அது மட்டுமில்லாமல் எனக்கு ஆலோசனைகளை ,அழகாய், அள்ளி வழங்கியிருக்கிறார்.அதையெல்லாம் ஓரளவிற்கு கடைபிடித்து வருகிறேன் என்றே சொல்ல வேண்டும். //

    நானும் திரு VGK வாசகர்களில், ரசிகர்களில் ஒருவன். நகைச்சுவையாகவும் புரியும்படியாகவும் எழுதுபவர். அவரைப் போல எல்லா பதிவுகளுக்கும் போய் கருத்துரை, ஆலோசனை வழங்க யாராலும் முடியாது.

    // பதிவுகள் எழுத ஆரம்பித்த பொழுது தான் உணர்ந்தேன் ,வலையுலகம் என்பது ,கட்டுபாடுகளற்ற சுதந்திரமான வெட்டவெளி. அதில் எழுத்துப் பயணம், என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் தவறினாலும், கத்தி நம்மைப் பதம் பார்த்து விடும் //

    வலைப்பதிவு உலகத்தை சரியாக புரிந்து கொண்டீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!


    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வேர்ட் பிரஸ் பற்றி சொல்வது உண்மை தான் என்றே நினைக்கிறேன். கருத்து எழுதுவதற்கு கொஞ்சம் மெனக்கெடத் தான் வேண்டிருக்கிறது.
      வைகோ சாரைப் பற்றி சொலவதும் உண்மை தான் நல்ல ஆலோசனைகள் வழங்குவதில் அவருக்கு நிகர் அவரே!
      நன்றி தமிழ் சார் உங்கள் வாழ்த்துக்கு.

      Delete
    2. தி.தமிழ் இளங்கோ23 November 2013 10:21

      ** திரு வைகோ சார் வலைக்குச் சென்று அவரை என் தளத்திற்கு வரவேற்றேன். தவறாமல் உடனடி வருகைப் புரிந்தார்.அது மட்டுமில்லாமல் எனக்கு ஆலோசனைகளை ,அழகாய், அள்ளி வழங்கியிருக்கிறார். அதையெல்லாம் ஓரளவிற்கு கடைபிடித்து வருகிறேன் என்றே சொல்ல வேண்டும். **

      //நானும் திரு VGK வாசகர்களில், ரசிகர்களில் ஒருவன். நகைச்சுவையாகவும் புரியும்படியாகவும் எழுதுபவர். அவரைப் போல எல்லா பதிவுகளுக்கும் போய் கருத்துரை, ஆலோசனை வழங்க யாராலும் முடியாது.//

      ஆஹா, வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா !

      மிகச் சாதாரணமானவன் ஆன என்னைப்பற்றி ஏதேதோ அசாதாரணமாய் சொல்லியிருக்கிறீர்கள், ஐயா. தன்யனானேன். மிக்க நன்றி, ஐயா.

      அன்புடன் VGK

      Delete
  26. திருமதி. ராஜலக்ஷ்மி அவர்களே வலையுலகில் ஓராண்டு பவனி வந்ததற்கு முதலில் என் வாழ்த்துக்கள் வலையுலகம் கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமான வெட்ட வெளிதான். ஆர்வமும் ஆற்றலும் குறையாமல் எதற்கு எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதைத் தொடர்ந்து செவ்வனே செய்ய மீண்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி GMB சார்.

      Delete
  27. அவர் எடிட் செய்யவில்லை,என்றால் பல சமயங்களில், நான் வம்பில் மாட்டியிருப்பேன்//

    எடிட்டருக்கும் ஒரு க்ரெடிட் கிடைத்து இருக்கிறதே !!!

    க்ரேட்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுப்பு ஐயா உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.

      Delete
  28. வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜி உங்கள் வாழ்த்துக்கு.

      Delete
  29. ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள் ராஜி. உங்கள் பதிவைப் படிப்பது சந்தோஷமான ஓர் அனுபவம். அரட்டை மேலும் தொடரட்டும்.
    நான்தான் உங்களுக்கு கிரியா ஊக்கி என்பது சந்தோஷமான விஷயம். என்னாலும் ஒரு நல்ல எழுத்தாளரை உருவாக்க முடிந்திருக்கிறதே!
    உங்களிடம் இருக்கும் திறமை உங்களை முன்னணியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அதுதான் உண்மை.
    மேலும் மேலும் உங்கள் எழுத்து பிரகாசிக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
    சில நாட்களுக்கு net fasting - இல் இருக்கிறேன். கூடிய சீக்கிரம் மறுபடி இணையத்தில் உலா வருவேன்.
    வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரஞ்சனி. உங்களைப் பற்றிய செய்தியை நான் படித்திருக்கவில்லையென்றால் இந்த பதிவுலகம் கண்டிப்பாக எனக்கு பரிச்சியமாயிருக்காது . அது தான் உண்மை.அதற்காக உங்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
      உங்கள் net fasting முடிந்து நீங்கள் விரைவில் நெட் உலா வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
      மீண்டும் நன்றி என்னை ஊக்குவிப்பதற்கும்,, உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும்.

      Delete
  30. உங்கள் எழுத்தென்ற குழந்தை தவழ ஆரம்பித்து, ரசனையாகவும் நகைச்சுவையாகவும் சுவை பட எழுதி ஓராண்டில் அழகாக வெற்றி நடை பயில ஆரம்பித்து விட்டது. இனி ராஜ நடை போட ஆரம்பித்து விடும்!

    ஓராண்டு நிறைவிற்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.என்னை நீங்கள் வலைசரத்தில் அறிமுகப் படுத்தியது என் வலைக்கு நிறைய வாசகர்களை கொண்டு வந்து சேர்த்தது. அதற்கு நான் மிகவும் நன்றி கடமைப் பட்டிருக்கிறேன்.நன்றி.

      Delete
  31. அன்புடன் நல்வாழ்த்துக்கள்..

    சில தினங்களாக இங்கே இணைய இணைப்பில் - ஏதோ கோளாறு!..
    யாரோ பயங்கர சதி செய்து இருப்பதாக சந்தேகம்.. அதனால் தான் அங்குமிங்கும் விரைவாக வரமுடியவில்லை!.. என்னையும் நினைவில் கொண்டு நன்றி கூறியமைக்கு நன்றி!..

    உங்களுடைய கோரிக்கை ஒன்று என்னிடம் நிலுவையில் உள்ளது. நினைவிலும் உள்ளது. என்ன செய்வேன்?!.. நேரம் போதவில்லை!.. இணைய இணைப்பு வேறு பாடாக படுத்துகின்றது!.. நல்ல நேரம் கூடி வரட்டும்!..

    வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்., வாழ்த்துக்கும்.

      Delete
  32. 2012 நவம்பர் 22ல் தான் - தஞ்சையம்பதியின் முதல் பதிவு!..
    விளையாட்டாக ஓராண்டு ஓடி விட்டது!..

    திரும்பிப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கின்றது!..
    அத்துடன் சந்தோஷமாகவும் இருக்கின்றது!..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவுகள் மூலம் ஆன்மிகம் வளர்க்கும் மிகப் பெரிய பணியை செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.......உங்கள் சந்தோஷத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

      Delete
  33. அரட்டைக்கு முதலாண்டு நல் வாழ்த்துகள். செய்தி போகிரதா எனப் பார்க்க வெள்ளோட்டமிது. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி காமாக்ஷி அம்மா.

      Delete
  34. கமென்ட் எழுதினால் போகவில்லை. அதனால் ஒரு சிறிய கமென்ட் அனுப்பினேன்.
    உங்கள் தளத்தின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு என் மனம் நிறைந்த அன்பான ஆசிகள்.
    என்னைப் பற்றி எழுதியுள்ளீர்கள். பிரமாதமாக ஒன்றுமில்லை. தமிழ் எழுதப் படிக்கத் தெரியும் என்ற மூலதனம், உப்பும் புளிப்புமாக பதிவில் வந்தேன்.
    நல்ல நகைச்சுவையும்,விஷயங்களுமாக உங்கள் பதிவு மிக்க நல்வரவைப் பெறுகிரது.
    ஸந்தோஷமாக இருக்கிரது.
    மேன்மேலும் சிறப்பும்,வாழ்த்துகளும் தொடரட்டும். அன்பும் ஆசிகளும்.சொல்லுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் , திருமதி ரஞ்சனியுமே நான் பதிவுகள் எழுதக் காரணம் என்று அடித்து சொல்வேன். மேலும் , என் பதிவுக்கு உங்களைப் போன்றவர்களது வருகைகளும், கருத்துக்களும் பெரிய போனஸ் தான். உங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களது ஆசிகளை வணக்கத்துடன் பெற்றுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

      Delete
  35. வேர்ட் ப்ரஸ் காமிற்கும்,ப்ளாகருக்கும் இவ்வளவு வேற்றுமைகளா? அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. உங்களது மீள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி காமாக்ஷி அம்மா .
      எனக்கென்னவோ வேர்ட்பிரஸ்சிறகும், ப்ளாக்கருக்கும் மிக நிறைய வித்தியாசங்கள் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் எல்லாவற்றுக்குமே பழக்கம் தான் காரணம் என்றே நினைக்கிறேன்.
      வணக்கத்துடன் நன்றி.

      Delete
  36. Congrats Raji madam! Happy blogging!

    ReplyDelete
  37. ராஜி மேடம், உங்க வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்! :)

    ReplyDelete
  38. ஆஹா, பாட்டி! இந்த தூண்டுதலாக வலைப்பதிவை மிகவும் சிறப்பாக உள்ளது!

    ReplyDelete
  39. அடடா, இப்பத்தான் இந்தப்பதிவு பார்த்தேன். சூப்பர் அம்மா... ஒரு வருஷம் ஆயிருச்சா... என் பேரெல்லாம் சொல்லியிருக்கீங்களே....

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் மேடம். ஆரம்பத்தை அருமையாக சொன்ன விதம் அற்புதம்.

    ReplyDelete
  41. My heartful wishes mam! (ofcourse very delay...! sorry)

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்