Wednesday 16 January 2013

' லடாய் '


 எனக்குத்       திருமணமான   புதிது.
சென்னையில்  வங்கி  அதிகாரியா  என் கணவருக்கு  டில்லி  மாற்றல் .
அதுவரை   நான்   சென்னை   எல்லையை   அதிகம்    தாண்டியதில்லை.  தில்லி என்றதும்  மனம்    துள்ளலாட்டம்    போட்டது.  புது ஊர்,  புது  மக்கள் ,  புது  விடு,  புது மொழியும் கூட....மனம்  இறக்கை கட்டிப்  பறந்தது.பெற்றோர்கள் ,சித்தப்பா,சித்தி,  தம்பி, தங்கை   எல்லோரையும்   விட்டு  விட்டு  
 இவ்வளவு      தூரமா............?   பயம்   கலந்த   மகிழ்ச்சியை  அனுபவித்தேன் .

டில்லி  மாற்றல்   என்றதும்   நான் முதலில்   செய்தது   "முப்பது  நாளில் ஹிந்தி  " என்ற    புத்தகத்தை   வாங்கியது   தான் .படித்தும்   வைத்தேன்.

அதனால்   ஹிந்தியில்  M.A.,, பட்டம்    வாங்கியது   போல்    நினைத்துக் கொண்டு  G.T.  Express  ஏறினேன் . ஜன்னலோர  சீட்  கிடைத்திருந்தது.  எல்லோரும்    தூங்கிய  பிறகும் ,   பிடிவாதமாய்  இருட்டில்  வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். கூடவே  என்கணவரும்   அமர்ந்திருந்தார்.
 வேறு   வழி ?.
(ரயில்   பயணம்   எனக்கு   மிகவும்   பிடித்தமான   ஒன்று,    இன்றும்   கூட)

யில்    எல்லாவற்றையும்   பின்னோக்கி  தள்ளியபடி     போய்க்    கொண்டே ...................இருந்தது. 36  மணிநேரத்திற்குப்  பிறகு  தள்ளாடியபடி ,  ஒரு பெரிய பெருமூச்சை   விட்டபடி,   களைத்துப்போய்     நியு டெல்லி   வந்தடைந்தது .

இப்பொழுது  போல்  ,செக்யுரிட்டி  ,போலீஸ்  என்று  எந்த தேவையுமில்லாத   நகரமாயிருந்தது    டெல்லி   அப்பொழுது.  மெதுவாக   சாமான்களை   எடுத்துக் கொண்டு " கரோல்  பாக்" கிற்கு  எங்கள் புது  வீட்டிற்கு(வாடகை   தான்   )  வந்தோம்  .

வந்தவுடன்   குளித்து   அஜ்மல்கான்   ரோடில்  உள்ள   மதராசி   ஹோட்டலில்  தோசையும்    காபியும்    சாப்பிட்டு    விட்டு ,    வீ ட்டிற்குத்    தேவையானதை
  வாங்க  சென்றோம்.

அங்கே  தான்   ஏட்டு  சுரைக்காய் கறிக்கு   உதவாது   என்பதை   புரிந்து  கொண்டேன்.

மளிகை  சாமான்    வாங்க , மேடையே   இல்லாமல்  ,  நட்டுவாங்கம்   இல்லாமல்   பரத நாட்டியம்,  குச்சுப்பிடி   என்று    பல வகை  நடனங்கள்   ஆட   வேண்டியதாயிற்று. 
என்னுடைய    முப்பது   நாட்களில்  ஹிந்தி  படிப்பு , சுத்தமாய்   பலனளிக்கவில்லை.     
அப்பொழுது    மட்டுமில்லை  பின்னரும்   பல  மாதங்கள் வரை   என்னிடம்    ஹிந்தி   மாட்டிக்   கொண்டு   படாத   பாடு   பட்டது.  


எல்லா  உரையாடல்களுக்கும்    முடிவில்  '  ஹை   ஹை '  என்று   குதிரை   ஒட்டிக்  கொண்டிருந்தேன்.  அப்பொழுது    தானே   அது    ஹிந்தி ?

" பனீர்  "  என்பதை    பன்னீர்  ஆக்கி   எல்லோரையும்    ஒரு முறை   திரும்பி   பார்க்க     வைத்தேன் .


டில்லியில்    இருக்கும்   காய்கறிகாரருக்கும்      ஆங்கிலம்   தெரியும்   என்பது என்னுடைய   நினைப்பு.  ஏன்   அப்படி    நினைத்தேன் ?  தெரியவில்லை.

அதனால்    என்னுடைய   ஹிந்தி   எடுபடாத   இடங்களில்   எல்லாம்   உடனே    ஆங்கிலத்திற்கு    சடாரென்று    தாவி    விடுவேன்.     
எல்லோரிடமும்    இதே   அடாவடி       தான்.
(கல்லூரி    மாணவர்கள்    பாஷையில்    சொல்வாதானால்  ' பீட்டர்'  'விட்டிருக்கிறேன் ) 

அதுவும்   சரிவரவில்லை   பல சமயங்களில்   சைகை  பாஷையை   உபயோகிக்க    வேண்டியதாயிற்று


சந்த்ரா (ஆரஞ்சு), விற்பவரும்    மாட்டிக்கொண்டார்.  .அங்கே   பேரம்   கூட பேசினேன்.  மகாகவி   காளிதாஸ்  படத்தில்   சிவாஜி கணேசனும்    சௌகார் 
ஜானகியும்    சைகை பாஷையில்    பேசிக்கொள்வது போல்   சைகையிலேயே   பேரம்  பேசினேன்.  அங்கங்கே    தோ  ,தீன்   என்று   
 ஹிந்தியில்    அலட்டல்   வேறு.

அன்று  ரசத்திற்கு  நெய்  விட்டு   சீரகம்   போட்டேன்   தாளிக்க  
.வெளியே  'சிக்கு  சிக்கு'
என்று  யாரோ   அலறுவது    கேட்டது.  அவ்வளவு தான்   ஸ்டவை  குறைத்து விட்டு   பால்கனிக்கு   ஓடினேன்.
 (அப்பொழுது கேஸ்  கிடையாது.நிறைய  விடுகளில்    Nutan
ஸ்டவ்  தான் இருக்கும். அப்பொழுதெல்லாம்   , சென்னை   சென்ட்ரலில்    G.T.  Express லிருந்து   இறங்குபவர்கள்  கையில்  இந்த ஸ்டவ்,  மோடா,  கண்டிப்பாய்   இருக்கும்     )

என் கணவர் எங்கே ஓடுகிறாய்   என்றதற்கு   பதிலே சொல்லவில்லை.  தெருவில்   பார்த்தால்  ,  வண்டியில் சப்போட்டா .

உனக்கு வேண்டுமா என்றார். இல்லை    
'சீக்கு  சீக்கு '  என்று கேட்டது  என்றேன்  நான்.  

அதற்குள்    பக்கத்து வீட்டுப்   பெண்மணிக்கு நான் மொழி புரியாமல்  விழிப்பது   புரிந்து விட்டது.  சிரித்துக் கொண்டார். பின்     என்னிடம்   விட்டிற்கு வாருங்களேன்      என்று   ஹிந்தியில்    சொல்ல    அது   புரிந்தது   எனக்கு.
" மே   ஆரஹா   ஹும் " என்று  நானும்  ஹிந்தியிலேயே  பெருமையாக     பதிலுரைத்தேன்.   இன்னும்  சத்தமாக  சிரித்தார். 

சில  நாட்களுக்கு   பின்னர்   தான்   தெரிய வந்தது     நான்  " ஜெண்டர் "  மாற்றிப்   பேசியிருக்கிறேன்.  என்று.  வெட்கமாக  இருந்தது.  ஆனால் நடந்து முடிந்து விட்ட  நிகழ்ச்சிக்காக    வருத்தப்பட்டு என்ன புண்ணியம்.  அதற்காகவெல்லாம்     ஹிந்தி பேசுவதை   நிறுத்த முடியுமா  என்ன?
நிறுத்திவிட்டால்  டெல்லியில் எப்படி  குப்பைக் கொட்டுவது?


பிரிதொரு    நாள்  பக்கத்து  வீட்டுப் பெண்மணியிடம்   என்ன சமையல்   என்று   நான்   அரைகுறை   ஹிந்தியில்   கேட்க   அந்தப்   பெண்ணோ  '  ரொட்டியும், 
மட்டர்  பனீர் ,' ம்  என்றார்.

ரொம்ப  நாள்   அவர்கள்   சொன்னதை  மட்டன்   என்றும்  ,ரொட்டி   என்பதை   பிரெட்    என்றும்       நினைத்துக்  கொண்டிருந்தேன்.
அப்புறம் தான் தெரிந்தது   பச்சை  பட்டாணி  ,  சப்பாத்தி   என்று.

 தீவிரமாக  ஹிந்தியை   கொன்றிருக்கிறேன்.

மக்கன் (வெண்ணெய்)   மக்கான்(வீடு)   இரண்டுக்கும்   வித்தியாசம் தெரியாமல்   'மகன்'    என்று சொல்வதைக்  கேட்டு    நிறைய பேர்  குழம்பியிருக்கிரார்கள் .

மளிகைக்  கடைக் காரர்   '  நமக்'  என்று சொன்னதை  புரிந்து  கொள்ள முடியாமல்   திண்டாடி   உப்பு   பாக்கெட்டை  காட்டிய  பின்  புரிந்து கொண்டேன்.

ஹிந்தியுடன்   நான்   போட்டுக் கொண்ட  'லடாய் '  கொஞ்சமில்லை   நஞ்சமில்லை.

  நான்கு    வருடம்  டெல்லியில்  இருந்திருப்போம்  என்று நினைக்கிறேன்.
ஓரளவு   ஹிந்தி  பேச  ஆரம்பித்தேன்  .கணவரின்   வங்கியில்   பொறுக்குமா?

உடனே   பெங்களூர்    மாற்றல்.   
மூட்டை  கட்ட   ஆரம்பித்தேன் .ப்பொழுது  முப்பது   நாட்களில்   கன்னடா  பேசலாம் புஸ்தகம்   என் கையில் இருக்க,  என்னவரோ   என்னைப்  பார்த்து  நமட்டு  சிரிப்பு  சிரித்தார்.  அதற்காக     முயற்சியை   கைவிவில்லை.

இதெல்லாம்  நடந்தது   முப்பத்தைந்து   வருடங்களுக்கு  முன்பாகத்தான்.

image courtesy   -  google

21 comments:

  1. நன்றாக நகைச்சுவையாக தங்களின் அனுபவங்களைச் சொல்லி எழுதியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. //மக்கன் (வெண்ணெய்) + மக்கான்(வீடு) இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல்
    'மகன்' என்று சொல்வதைக் கேட்டு
    நிறைய பேர் குழம்பியிருக்கிறார்கள்.//

    குழம்பியதோடு நில்லாமல் நம்மை ‘மக்கு’ என்றும் நினைத்திருப்பார்களோ என்னவோ ! ;)))))

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார்,

      உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும், பாராட்டிற்கும் நன்றி.

      ராஜி

      Delete
  3. ஹா ஹா ஹா !
    அருமை அருமை சகோதரி! நம்மில் பலர் இப்படி நாக்கை கடித்துக்கொள்ளும் விஷயங்களை வெளியில் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். நீங்க பகிர்ந்துகொண்டவிதம் ரொம்ப பிடிச்சிருக்கிறது. நானும் அமீரகம் வந்து ஹிந்தி படிச்ச விஷயங்கள் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் இங்கு பகிர்ந்துகொண்டால் சிரிக்க மாட்டாங்க, என்னை தேடி வந்து அடி கொடுப்பார்கள்.

    வெளியூர் போவதென்றால், அம்மா அப்பாவை கூட மறக்க வைக்கும் அந்த சந்தோஷம், எவ்வளவு நாசுக்கா சொல்லிருக்கிங்க, முதல் பாராவை ரொம்ப ரசித்தேன். ம்ம்ம் அப்பறம் என்ன ஆச்சி, கர்நாடகா சென்றதும், கன்னடம் பேச எவ்வளவு பாடு பட்டிங்க என்பதையும் சொல்லுங்க, நாங்களும் படித்து ரசிக்கிறோம். உண்மையை சொல்லப்போனால் உங்களுக்கு நிறைய மொழிகள் தெரியும் என்று நினைக்கிறேன்.

    நீங்க வருங்கால பிரதமர் பதவிக்கு போட்டியிடலாம், :-)))))))))) ஹா ஹா ஹா! இப்படி கேட்டு அவருகிட்ட அடி வாங்கிக்காதிங்க, அப்பறம் இந்த சகோதரன்தான் வரணும் பஞ்சாயத்துக்கு...

    குறிப்பு: ஏதோ ஒரு உரிமையில் உங்களை சகோதரி எனக் கூப்பிட்டு கிண்டல் செய்கிறேன், தவறாக நினைக்கவேண்டாம். இப்படி பேசும்போதுதான் இணையம் கூட எனது சொந்தகாரர்களின் வீடுபோல் தோன்றுகிறது. அப்படி தவறு என்றால் மனிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. ஆகாஷ்,

      நீங்கள் என்னை தாராளமாக சகோதரி என்றே அழைக்கலாம்.கன்னடமும் கொஞ்சம் கொஞ்சம் பேச கற்றுக் கொண்டேன். அதைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவும் எழுதியிருக்கிறேன்.
      அதன் link http://rajalakshmiparamasivam.blogspot.com/2012/11/blog-post_28.html

      நேரம் கிடைக்கும்போது இதையும் படித்துவிட்டு கருத்தை எழுதுங்கள்.
      //நீங்க வருங்கால பிரதமர் பதவிக்கு போட்டியிடலாம்,// நான் வெறும் arattai அடிப்பவள். இணையத்தை மட்டும் சுற்றி வருவோம்.நீங்கள் சொல்வது போல் இணையத்தில் எல்லோரும் சொந்தமே.மகிழ்ச்சியுடன் உரையாடுவோம்

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      அன்புச் சகோதரி,
      ராஜி

      Delete
  4. (ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, இன்றும் கூட)

    ரசிக்கும் படி மொழியால் திண்டாடீருக்கிறீர்க்ள்..!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி,

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      ராஜி

      Delete
  5. ரயில் பயணம் எனக்கும் மிகவும் பிடிக்கும். ஜன்னல் பக்கம் இருக்கை என்றால் மேலும் மகிழ்ச்சி.
    உங்கள் அனுபவங்களை அருமையாக பகிர்ந்து இருக்கிறீர்கள்.
    நான் மகள் ஊருக்கு போனால் (டெல்லி) காய் வாங்க போகும் போது அரைக்கிலோ ,1 கிலோவுக்கும் பாக்கி வாங்கவும் கற்றுக் கொண்டு காய் வாங்கி வந்துவிடுவேன். பேசினால் புரிகிறது ஆனால் பேசவரவில்லை. கன்னடம் கொத்தா?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டிற்கும் நன்றி.கன்னடம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.அதைப் பற்றியும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்."ஆணிற்கு பெண் சரி நிகர் சமம் " என்பது பதிவு. நேரம் கிடைக்கும் பொது படித்து கருத்து எழுதுங்கள்.

      நன்றி.

      ராஜி.

      Delete
  6. ஹிந்தி முதலில்; பிறகு கன்னட கற்றுக் கொண்டீர்களா?
    எஸ்.வி. சேகரின் நாடகம் வண்ணக் கோலங்கள் பார்த்திருக்கிறீர்களா?
    அவருக்கு டில்லிக்கு மாற்றல் ஆகிவிடும். ஹிந்தி வாத்தியார்களை வரவழைப்பார். சிரித்து சிரித்து கண்களில் நீர் வந்துவிடும்.

    உங்களுடைய அனுபவமும் அப்படித்தான் இருந்திருக்கிறது. எனக்கும் பெங்களூர் வரும் முன்பு கன்னட தெரியாது.ஆனால் மூன்றே மாதங்களில் பேசக் கற்றுக் கொண்டுவிட்டேன்.

    எனக்கும் ஹிந்தி வராது. ஆனால் வட மாநிலங்களுக்கு போகும் போது என் அரைகுறை அறிவை காட்டத் தவறியதே இல்லை!

    ரயில் பயணம் எனக்கும் கூடப் பிடிக்கும்.

    எப்போது இங்கு வருகிறீர்கள்? மெயில் அனுப்பவும். உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ரஞ்சனி,

      ஹிந்தியைப் போலவே கன்னடமும் சுமாராகப் பேசுவேன்.அதைப் பற்றியும் ஒரு பதிவு
      இருக்கிறதே http://rajalakshmiparamasivam.blogspot.com/2012/11/blog-post_28.html லிங்க் ல் உள்ளது. நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து எழுதுங்கள்.

      பெங்களூர் வர வேண்டியது இருக்கிறது. வரும் போது கண்டிப்பாகத் தெரிவிக்கிறேன். எனக்கும் சந்திக்க ஆவல் தான்.சந்திப்போம்.
      வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

      அன்புடன்,
      ராஜி.

      Delete
  7. Replies
    1. sir,

      thankyou for your appreciative comments.

      friendly,
      raji

      Delete
  8. ராஜலஷ்மி,

    உங்க டில்லி&ஹிந்தி அனுபவத்தை ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க.ஹிந்திக்கு அடுத்து கன்னடம், அடுத்து இன்னும் பல மாநிலங்களுக்கு பயணமாகியிருப்பீங்க,அந்த நிகழ்வுகளையும் உங்க ஸ்டைலில் (நகைச்சுவையாக)எழுதுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சித்ரா, நிறைய மாநிலங்கலெல்லாம் இல்லை. டெல்லியும் கர்நாடகா வும் தான். http://rajalakshmiparamasivam.blogspot.com/2012/11/blog-post_28.html
      என்ற லிங்கிற்கு போனிர்கள் என்றால் கன்னடத்தில் தலை சுற்றி குழம்பிய ஒரு நிகழ்ச்சியைப் பற்றி சொல்லியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்து உங்கள் கருத்தை கூறுங்களேன் .
      இன்னும் இருக்கிறது. எழுதுகிறேன்.

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சித்ரா.

      ராஜி

      Delete
  9. மிகவும் ரசித்து எழுதிய பகிர்வு போல இது.... அதனால் தான் சிறப்பாக வந்துள்ளது. எனக்கும் ஹிந்தி அனுபவங்கள் உண்டு! தில்லி வந்த போது ஹிந்தியில் ஒரு அக்ஷரம் கூடத் தெரியாது எனக்கு! 30 நாட்களில் ஹிந்தி புத்தகமும் படித்தது கிடையாது. தடாலடியாக ஹிந்தி என்னிடம் பாடுபட்டது.... :)

    ரசித்தேன்.... தொடரட்டும் பகிர்வுகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய வலைப் பக்கம் நேற்று வந்தேன். டெல்லியைப் பற்றி படித்ததும் எனக்கு பழைய நினைவலைகள் மோதிக்கொண்டு வந்தன.
      அப்படியே முப்பத்தைந்து வருடம் பின்னோக்கி போய்விட்டேன். அதை அப்படியே பதிவும் செய்தேன்.

      நன்றி உங்கள் பாராட்டுக்கு, மட்டுமல்ல என்னுடைய இனிமையான இளமைக்காலத்தை நினைவுபடுத்தியதற்கும் கூட.

      நட்புடன்,
      ராஜி

      Delete
  10. நகைச்சுவையான பதிவு! மொழி தெரியாத ஊரில் மாட்டிகிட்டா எப்படி இருக்கும் என்று அனுபவித்து படிக்க முடிந்தது! :)

    ReplyDelete
    Replies
    1. மஹி,

      உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.


      ராஜி

      Delete
  11. இயல்பான நடையில் ரசிக்கும்படியாகச்
    சொல்லிப் போனவிதம் அருமை
    நானும் புதிதாக மத்திய பிரதேசம்
    போயிருக்கையில் சவுடாலாக
    பலசரக்கு சாமான் பட்டியலை இந்திச் சொற்களை
    தமிழில் அழகாக எழுதி அருமையாகச் சமாளித்தேன்
    எல்லாம்முடிந்தபின் அவர் அவுர் எனக் கேட்க
    எனக்கு அவ்வளவுதான எனச் சொல்லத் தெரியாமல்
    மாட்டிக் கொண்டு முழித்ததும் ஜாடை நர்த்தனம் ஆடியதும்
    பின்பு அவரே பஸ் என் அடியெடுத்துக் கொடுக்க
    தப்பித்த விதமும் இன்று நினைத்தாலும் சிரிப்பை
    அடக்கமுடிவதில்லை
    மனம் கவர்ந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரமணி சார்,
      புது மொழியில் உரையாடவேண்டிய சூழ்நிலையில் எல்லோருமே திண்டாடித் தான் போகிறோம்.
      உங்கள் வருகைக்கும், அழகான பாராட்டுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      நட்புடன்,
      ராஜி

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்